×

நியாயவிலை கடையில் 13 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்!: தமிழகத்தின் பல இடங்களில் டோக்கன் விநியோகிக்கும் பணி தீவிரம்..!!

சென்னை: ரேஷன்கார்டு தாரர்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணிக்காக தமிழகத்தின் பல பகுதிகளில் டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான டோக்கன் வழங்கும் பணி பல மாவட்டங்களில் நேற்றே தொடங்கிவிட்ட.  நிலையில், சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. 


டோக்கன் அச்சு அடிக்க தாமதமான காரணத்தினால் சென்னையில் இன்று டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எந்த தேதி, நேரத்திற்கு வரவேண்டும் என்ற விவரங்கள் இந்த டோக்கன்களில் இடம்பெற்றுள்ளன. 4ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமாகி உள்ளது. தினந்தோறும் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில், கேஸ்கள் குறைந்ததால் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது வரும் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்தது. 


தொடர்ந்து, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் நடமாடும் வண்டிகளில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வது போல் மளிகை பொருட்களும் விற்பனை செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கின.  யாரும் பசியின்றி இருக்கக் கூடாது என்பதற்காக 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது சென்னை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 



Tags : Tamil Nadu , Fair store, Grocery stores, Token distribution
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...